தருமபுரி:பாலக்கோடு ஏல குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கிணற்றில் இன்று (நவ.19) அதிகாலை 12 வயது பெண் யானை விழுந்தது. 50 அடி கிணற்றில் இருந்து யானையை மீட்கும் பணியில் தருமபுரி பாலக்கோடு வனத்துறையினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த தேன்கனிகோட்டை வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், கிருஷ்ணகிரி வன அலுவலர் பிரபு உள்ளிட்டோர் பார்வையிட்டு மீட்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ராட்சத கிரேன் மூலம் மீட்க முயற்சி செய்து வருகின்றனர். மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தற்போது கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மோட்டார்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றில் உள்ள யானைக்கு உணவாக தென்னங்கீற்றை வழங்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தருமபுரியில் 50 அடி கிணற்றில் விழுந்த யானை - மீட்பு பணி தீவிரம்