தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடு மேய்க்க அபராதம் விதிக்கும் வனத்துறை - விவசாயிகள் வேதனை

ஆடு மாடு மேய்ப்பதற்கு அபராதம் விதிப்பதாக தர்மபுரி மாவட்டம், கோடுபட்டி அதனை ஒட்டி உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

By

Published : Jun 30, 2023, 4:39 PM IST

Updated : Jun 30, 2023, 4:51 PM IST

dharmapuri
தர்மபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி அதனை ஒட்டி உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய தொழிலோடு இணைந்து ஆடு வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக வனப்பகுதியில் ஆடு மேய்க்க பென்னாகரம் வனத்துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆடி மாதத்தில் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாயும் வருட பிறப்பான ஜனவரி மாதத்தில் 1000 ரூபாயும் என கணக்கிட்டு வனத்துறை ஊழியர்கள் பணம் கேட்பதாகவும் பணம் தர மறுத்தால் அபராதம் விதிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

dharmapuri

கோடுபட்டியைச் சேர்ந்த மாணிக்கம் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். ஆடு மாடு மேய்ப்பது தொழில் சேர்ந்தவர்களும் ஆடு மேய்த்தல் சுண்டைக்காய் சேகரித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். வனத்துறையினர் காடுகளில் ஆடு மேய்க்க கூடாது சுண்டக்காய் பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:மணிப்பூர் வன்முறை: தமிழ்நாடு முழுவதும் அமைதி பேரணி நடத்த தமிழக ஆயர் சங்கம் அறிவிப்பு!

அது மட்டுமில்லாமல், ஆடு மேய்ந்தாலும், ஆடு மேய்த்தாலும் அபராதம் விதிக்கின்றனர். அரசு காடுகளில் விறகு பெருக்கலாம், ஆடு மாடு மேய்க்கலாம் என்று கூறி வருகிறது. அதே போல் வனத்திலிருந்து வனவிலங்குகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்கிறது. ஆனால் அவர்களுக்கு அது கணக்காக தெரிவதில்லை. வனத்திற்குள் சென்றால் உடனடியாக அபராதம் விதிக்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

தாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பேசும்போது. ஆடி மாதத்தில் ஒரு ஆட்டுக்கு 300 ரூபாய் மாமூல் தர வேண்டும் என்றும் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் ஜனவரி மாதத்தில் தர வேண்டும். ரேஞ்சருக்கு மோதிரம் வழங்க வேண்டும் என வசூலிக்கின்றனர்.

மேலும், பணம் தர மறுத்தால் துப்பாக்கி வழக்கு போன்ற பொய் வழக்குகளை போடுவதாக மிரட்டுகிறார்கள். தொந்தரவு செய்கிறார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 26ம் தேதியன்று மனுவை வழங்கினோம். அதன் பின்பு மாவட்ட ஆட்சியிடம் மனு வழங்கியதற்காக வனத்துறையினர் 27ம் தேதி மாடு ஒன்றுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தை நாடிவரும் யானை, மயில், பன்றி போன்ற வன விலங்குகளை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் காட்டுக்குள் செல்வதில்லை வனத்துறைக்கு சவால் விட்ட விவசாயிகள்.

இதையும் படிங்க:ஈரோட்டில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு.. தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

Last Updated : Jun 30, 2023, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details