தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி, தன்னுடன் படித்து வந்த சக மாணவனைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்குத் தெரியவரவே, மாணவியைக் கட்டாயப்படுத்தி அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு திடீரென திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மாணவியின் கணவர் பெரியசாமி அம்மாணவிக்கு புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். கணவன் வாங்கி கொடுத்த போனில் தனது ஆண் நண்பருக்கு தொடர்பு கொண்டு நடைபெற்ற அனைத்து விசயங்களையும் கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியும், அவரது ஆண் நண்பரும் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில், ”பத்தாம் வகுப்பு படித்து வரும் எனக்கு 14 வயது ஆகிறது. எனது தந்தை மாதேஷ், தாய் அவுமாவு, பாட்டி லட்சுமி ஆகியோர் இணைந்து கட்டாயமாக பெரியசாமி என்பவருக்கு என்னை திருமணம் செய்துவைத்து விட்டனர். மேலும், பெரியசாமி தன் விருப்பம் இல்லாமல் தன்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவியின் புகாரைப் பெற்ற மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்குமாறு பாலக்கோடு மகளிர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் அதனடிப்படையில், பாலக்கோடு மகளிர் காவல் துறையினர் மாதேஷ், அவுமாவு, ல்ட்சுமி, பெரியசாமி ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா்.
இதையும் படிங்க:திக்விஜய் சிங் ஆதரவாளர்கள் மீது பாஜக புகார்!