கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பிற மாநில, மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் உணவு கிடைக்காததால் பசியுடன் வாகனத்தை இயக்கும் சூழல் உள்ளது.
வெளிமாநில லாரி ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவு! - லாரி ஓட்டுநர்கள்
தருமபுரி: ஊரடங்கால் உணவின்றி சிரமப்படும் வெளிமாநில லாரி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு ஓட்டுநர் சங்கம் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு ஓட்டுநர் சங்கம்
இந்நிலையில், உணவு கிடைக்காமல் சிரமப்படும் ஓட்டுநர்களுக்கு உதவிடும் வகையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடியில் தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கர்நாடகா, கேரளாவிற்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் பார்க்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்