தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடு வாங்க சென்ற வியாபாரிகளிடம் 3.89 லட்ச ரூபாய் பறிமுதல் - தருமபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி: தொப்பூர் பகுதியில் நடத்திய வாகனச் சோதனையில் 3.89 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

flying squad seized money merchants
சார் ஆட்சியர் அலுவலகம்

By

Published : Mar 9, 2021, 3:12 PM IST

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொப்பூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது, ஓமலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன், மாடு வாங்குவதற்காக சந்தைக்கு பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது.

இதேபோல் காரிமங்கலம் சந்தைக்கு மாடு வாங்க சென்ற மற்றொரு வியாபாரியிடம் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 41ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப்பணம் தருமபுரி சார் ஆட்சியர் அலுவலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரே நாளில் மாட்டு வியாபாரிகளிடமிருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:ரூ.2, 45, 000 பறிமுதல் பறக்கும் படை நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details