தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர், பாலக்கோடு மொரப்பூர் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள பூ சந்தை நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக சந்தை முடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக சந்தை சோகத்ததூர் மேம்பாலம் அருகே செயல்பட்டு வருகிறது. வழக்கமாக தருமபுரி பூ சந்தையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
பூ சந்தையில் வாடிக்கையாளர்கள் கூட்டம்
கனகாம்பரம், குண்டு மல்லி, சம்பங்கி, மல்லி, அரளி போன்ற பூக்கள் கரோனா காரணமாக ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் நாளை ஆடி வெள்ளி வரலட்சுமி விரதம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அதாவது நேற்றைய விலையை விட ஒரு மடங்கு உயா்ந்து விற்பனையாகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்குமுன்பு 200 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம், தற்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் குண்டு மல்லி 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று (ஜூலை30) கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 150 ரூபாய்க்கு விற்பனையான சன்னமல்லி பூ 400 ரூபாய்க்கும், சம்மங்கி 60 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும், அரலி கிலோ கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வரலட்சுமி விரதம் என்பதால் தாமரை பூ ஒன்று 30 ரூபாயாகவும், தாலம் பூ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : அண்ணா சிலை மீது காவித் துணி போர்த்தியதால் பரபரப்பு!