தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றனர். இந்த பூக்கள் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் விற்பனையாகிறது.
விநாயகர் சதுர்த்தி - பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி! - flowers rate hike
தர்மபுரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சந்தையில் பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.500-க்கும், கனகாம்பரம் கிலோ 600-க்கும், அரலி கிலோ 200-க்கும், பட்டன் ரோஸ் கிலோ 160-க்கும், சம்பங்கி பூ கிலோ 200-க்கும், ரோஜா பூக்கள் ஒரு கட்டு 80-க்கும், சாமந்தி பூ கிலோ 160-க்கும் விற்பனையாகிறது.
பூக்களின் விலை கடந்த வாரங்களை விட தற்போது உயர்ந்து விற்பனையாகிறது என்றும் சுபமுகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு லாபத்தை தந்து மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர்.