தர்மபுரி: தொப்பூர் பாப்பாரப்பட்டி பென்னாகரம் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்துவருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய மலர்களை தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
விலை உயர்வு
நாளை (ஆக 20) வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விற்பனையை தொடர்ந்து பூக்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு வந்திருந்தனர்.
கடந்த சில தினங்களாக வரலட்சுமி விரதம், சுபமுகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை
- மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்.
- கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்.
- செண்டுமல்லி கிலோ 40 ரூபாய்.
- சாமந்தி பூ கிலோ 80 ரூபாய்.
- சம்பங்கிப்பூ கிலோ 300 ரூபாய்.
- பட்டன் ரோஸ் ஒரு கிலோ 500 ரூபாய்.
- 20 ரோஜா கொண்ட ஒரு கட்டு 80 ரூபாய்.
- நந்த வட்டம் கிலோ 300 ரூபாய்.
- காக்கடா கிலோ 500 ரூபாய், அரை கிலோ 300 ரூபாய்.
- தாமரைப்பூ ஒரு மொட்டு 30 ரூபாய்.
- தாழம்பூ 30 ரூபாய்.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த மூன்று தினங்களாக பூக்கள்விலை உயர்ந்து விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
பண்டிகை தினம் என்பதால் பரமத்திவேலூர் கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் தர்மபுரி பூக்கள் மார்க்கெட்டில் பூக்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.
இதனால் தர்மபுரி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் வருமானத்தை இழந்த குடும்ப மாணவர்களுக்கு கல்வி அளிக்கத் தயாராக இருக்கும் தனியார் பள்ளி