தர்மபுரி: அரூர்அடுத்த கோட்டப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று (நவ.17) காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் வந்துள்ளனர்.
அப்போது, அறையின் மூலையில், 5 கிலோ எடை கொண்ட 5 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றினர். தொடர்ந்து கோட்டப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக்கு வந்த கோட்டப்பட்டி வனத் துறையினர், பாம்பை லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில், பாதுகாப்பாக விடுவித்தனர். பள்ளி கட்டிடத்தில் ஆங்காங்கே சிறு துவாரங்கள் இருப்பதால், அந்த வழியாக இந்த பாம்பு உள்ளே நுழைந்தது தெரியவந்தது.
எனவே பள்ளி கட்டிடத்தில் உள்ள சிறு சிறு துவாரங்களை அடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வகுப்பறைக்குள் நுழைந்த மண்ணுளிப் பாம்பு இதையும் படிங்க:கோவை சுயம்வரம் நிகழ்ச்சியில் 'சொத்து' ஏலம்.. வைரலாகும் இளைஞரின் புலம்பல் வீடியோ!