தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் பண்டிகை காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி நகரப் பகுதியில் தொடர் மழை காரணமாக பட்டாசு விற்பனை செய்யும் கடைகளிலும் பட்டாசு வாங்குவதற்கு ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தீபாவளி பண்டிகை காலங்களில் வழக்கமாக பண்டிகையின் முதல் நாள் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு கரோனா காரணமாகவும், மழை காரணமாகவும் மக்கள் கூட்டமின்றி சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.