தருமபுரி:தருமபுரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு(நவ.26) பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரியத் தூங்கி உள்ளது.
இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும். தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.