மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறு ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து கண்டறிய சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த மூன்று தினங்களாக விசாரணை செய்து வருகின்றனா்.
பென்னாகரம் பகுதிகளில் பிரதமரின் உதவி திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகள் ஏராளமானோர் பயன் பெற்று வருவதாக எழுந்த புகாரையடுத்து கடந்த இரு தினங்களாக பொது சேவை மைய ஊழியர்கள், தற்காலிக களப்பணியாளர்கள் என சுமார் 11 நபர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் செலுத்த கூடிய நிதியில் முறைகேடு செய்ததை கண்டறிந்து தற்காலிக கள பணியாளராக பணிபுரியும் மீனா என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடா்ந்து சி.பி.சி.ஐடி காவல்துறையினர் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.