தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்துள்ள கரகதஅள்ளி கிராமத்தில், பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே சுமார் 100 ஏக்கர் பரபரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. விவசாயமே பிரதான தொழிலான இவர்களுக்கு இந்த ஏரியே நீராதாரம். மழைக்காலங்களில் கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு நீர் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ஏரிக்கு நீர் செல்ல வழியே இல்லாமல் கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மக்கள் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் ஊா் மக்கள் ஒன்றிணைந்து ஏரிக்கு வரும் கால்வாயை தூர்வாரி சீரமைத்தனா். இருப்பினும், அங்குள்ள நீரோடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால், ஏரிக்கு நீர் வர மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.