தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிகாற்று குழாய்களை அகற்றுக... 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்! - farmers protest

தர்மபுரியில்  இறக்கி வைக்கப்பட்ட எரிகாற்று குழாய்களை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்தக் கோரி  200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

By

Published : Jul 19, 2021, 11:25 PM IST

கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் திட்டத்தை அமைத்திட கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து கடும் முயற்சி எடுத்து வருகிறது.

7 மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த போராட்டம்

திட்டத்தால் பாதிக்கப்படும் 7 மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலையோரமாகத்தான் திட்டத்தை அமைக்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சேமிப்பு கிடங்கில் எரிகாற்று குழாய்கள்

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி செல்லும் வழியில் உள்ள சேமிப்பு கிடங்கில் எரிகாற்று குழாய்களை இறக்கி வைக்கும் பணியை மிகப்பெரிய அளவில் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தொடர் காத்திருப்பு போராட்டம்

எனவே, எரிகாற்று குழாய்கள் இறக்கி வைப்பதை உடனடியாக கைவிடக் கோரியும், இறக்கி வைக்கப்பட்ட எரிகாற்று குழாய்களை தமிழ்நாட்டை விட்டு அப்புறப்படுத்த கோரியும் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details