தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை - Farmers' demand to remove canal occupation

தருமபுரி: அன்னசாகரம் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் சனத்குமார நதியில் வீணாகக் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்கால்

By

Published : Sep 25, 2019, 9:33 PM IST

Updated : Oct 2, 2019, 10:20 AM IST

தருமபுரி அன்னசாகரம் ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து மண் கொட்டியுள்ளதால் வாய்க்கால் முழுவதும் அடைபட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வராமல் சனத்குமார நதியில் வீணாகக் கலக்கிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்கால்

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், அன்னசாகரம் ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நம்பிதான் விவசாயிகள் உள்ளோம். ஏரிக்கு வரும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மழைக்காலங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு வரும் தண்ணீர் அனைத்தும் எறங்காட்டு கொட்டாய் பகுதி வழியாகச் சனத்குமார நதியில் வீணாகக் கலக்கிறது.

வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர், ஏரிக்கு முழுமையாகச் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர். தற்போது இந்த ஏரியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 2, 2019, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details