தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி - விவசாயிகள் கவலை! - தக்காளி விலை குறைவு

தருமபுரி: ஒரு கிலோ தக்காளி 12 ரூபாயாக விலை குறைந்ததால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

பாலக்கோடு மார்கெட்டில் விலை குறைந்த தக்காளி
பாலக்கோடு மார்கெட்டில் விலை குறைந்த தக்காளி

By

Published : Aug 3, 2020, 8:22 PM IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்குத் தினந்தோரும் 20 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கு நாள்தோறும் தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தக்காளிகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.

பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி - விவசாயிகள் கவலை!

இதனால் கொள்முதல் விலை குறைந்துள்ளது. வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூபாய் 12க்கு வாங்குகின்றனர். 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரங்களில், கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையான தக்காளி, தற்போது கொள்முதல் விலை 12 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 18 ரூபாயாக குறைந்துள்ளது. தக்காளி மகசூல் தரும் இம்மாதத்தில் விலை கடுமையாக குறைந்ததால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details