தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிப்பு - விவசாயி தற்கொலை

தர்மபுரி அருகே விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

By

Published : Apr 13, 2022, 5:36 PM IST

தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகேவுள்ள கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு அரை ஏக்கர் விவசாய விளைநிலம் உள்ளது. விவசாய கூலி வேலைக்குச் சென்று தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியே கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக நிலங்கள் அளவிடும் பணி நேற்று (ஏப்.12) முதல் நடைபெற்று வந்தது. கரியப்பன அள்ளி, பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் (ஏப்.13) அளவிடும் பணி நடைபெற்றது.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கணேசன் போராட்டத்தில் ஈடுபட்டார், பின்பு போராட்டம் நடந்த இடத்தில் இருந்து தனது நிலத்திற்குச் சென்றவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடலை தர்மபுரி - ஒகேனக்கல் சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தற்மபுரி உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், வட்டாட்சியர் ராஜராஜன் உள்ளிட்டோர் உயிரிழந்த கணேசன் குடும்பத்தினர், அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை கணேசன் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் சாலை மறியல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இதில், திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் சுமார் 15 நிமிடங்கள் மழையிலும் சாலை மறியல் நீடித்தது.

கொட்டும் மழையில் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் தர்மபுரி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்களை பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

உயிரிழந்த விவசாயின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி, விவசாய நிலங்களில் வழியாக கெயில் குழாய் பதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. அப்போது, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படுவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:என் கணவரின் சாவுக்கு நீதி வேண்டும்- சந்தோஷ் பாட்டீல் மனைவி!

ABOUT THE AUTHOR

...view details