தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்தது. தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில் சாமந்தி பூக்களின் விலை பல மடங்கு குறைந்து, கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுத பூஜையை எதிர்நோக்கி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு விலை குறைவு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு மற்றும் கேரள மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைந்ததன் காரணமாகவும், உள்ளூர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் விலை குறைந்து விற்பனையாகிறது.
இன்று ரோஜா பூ கிலோ 20 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 30 ரூபாய்க்கும், அரளி பூ கிலோ 30 ரூபாய்க்கும், மல்லிகை பூ கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கும், சாமந்தி ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பூக்கள் விலை குறைவால் பல வியாபாரிகள் பூக்கள் பறிக்க ஆகும் செலவு கூட கிடைப்பதில்லை என்பதால் பூக்களை தங்கள் விளைநிலங்களில் பறித்துக் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.