தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலம் அளவை செய்து தராத அலுவலர்களை கண்டித்து, குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி! - Dharmapuri collectorate news

தர்மபுரி: நிலம் அளவை செய்து தராத அலுவலர்களை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் மண்ணெண்ணைய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

விவசாயி தீக்குளிக்க முயற்சி
நிலம் அளவை செய்து தராத அலுவலர்களை கண்டித்து விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

By

Published : Mar 2, 2021, 10:40 AM IST

Updated : Mar 2, 2021, 11:15 AM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர், தனக்கும் தனது உறவினருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருவதாகவும், தங்களுக்கு சொந்தமான நிலத்தை அலுவலர்கள் அளவீடு செய்து தருமாறு கடந்த சில மாதங்களுக்கு முன் நில அளவை பிரிக்கு பணம் கட்டியுள்ளார். ஆனால் நிலம் அளவை செய்யும் அலுவலர்கள், வந்து அளவை செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பலமுறை அரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால் நிலம் அளவை செய்யும் அலுவலர்கள் இன்று, நாளை என காலம் கடத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அரூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சங்கர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க குடும்பத்துடன் வந்துள்ளார். தொடர்ந்து நிலத்திற்கு சென்று வர வழியல்லாமல் தவித்து வருவதாகவும், தங்களக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தராத அலுவலர்களை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது தாய் மற்றும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனையறிந்த காவலர்கள் அவர்களை தடுத்து, உடலின் மீது தண்ணீரை ஊற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர். எனினும் அவர்கள் மூவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்குவந்த அரூர் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க...பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Last Updated : Mar 2, 2021, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details