தர்மபுரி மாவட்டம், தொப்பூா் ரயில் பாதையில் நேற்று (ஆகஸ்ட்.24) மாலை குழந்தைகள் விளையாடக் கூடிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன. இதனை ரயில் பாதையில் இருந்த ரயில்வே ஊழியர்கள் பார்த்து தர்மபுரி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தர்மபுரி ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் ரத்னகுமார், போலி ரூபாய் நோட்டுகள் சிதறியிருந்த பகுதியில் ஆய்வு செய்து அவற்றைக் கைப்பற்றினார்.