தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: கணவனைக் கொலை செய்து எரித்த மனைவி? - திருமணத்தை மீறிய உறவு

தர்மபுரி: திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் மனைவியே தனது கணவனை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்பன்
ஐயப்பன்

By

Published : Dec 9, 2020, 5:45 PM IST

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் (50) என்பவரின் மனைவிக்கும், மற்றொரு நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இதனால், ஐயப்பன் தனது மனைவியைக் கண்டித்திருக்கிறார். அந்த உறவைத் துண்டிக்க வற்புறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஐயப்பனின் மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த திங்கள்கிழமை (டிச.7) அன்று ஐயப்பன் தன் மனைவியை வீட்டிற்கு சமாதானம் செய்து அழைத்து வருவதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாள்கள் கடந்தும் ஐயப்பன் வீடு திரும்பாததால் அவரது மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஐயப்பனைத் தீவிரமாகத் தேடினர்.

இதனிடையே, அடா்ந்த காட்டுப் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்ட சடலம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்தச் சடலத்தைக் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில் அது ஐயப்பனின் உடல் என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயப்பன் கொலையானபிறகு அவரது மனைவியும் தலைமறைவாகியுள்ளது இந்தச் சம்பவத்தில் மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இத்தம்பதியினருக்கு 25 மற்றும் 24 ஆகிய வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details