தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் இல்ல நிகழ்வில் திமுக எம்பி ஆ.ராசா மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர் தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எருமியாம்பட்டியில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அகிலன் ராம்நாத் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் திமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும், உதகை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
அதேநேரம், இந்த திருமண நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திமுகவில் இருந்து அதிமுகவுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், திமுகவைச் சார்ந்த பி.பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, திமுக எம்.பி. ஆ.ராசா, முல்லைவேந்தன், தங்கமணி, பழனியப்பன், ஜெகத்ரட்சகன் ஆகிய அனைவரும் கை குலுக்கி ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் அரசியல் களத்தில் கொள்கை ரீதியாக வெவ்வேறு கட்சிகளிலும், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குச் சென்று இருந்தாலும், தோழமை உணர்வோடு அனைவரும் கை குலுக்கி பேசிக்கொண்டது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு!