தர்மபுரி: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமா் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி வழிபாடு செய்தாா்.
கோயில் நிர்வாகத்தினர் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வில் அம்பு அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
மேலும் கோபுர கலசத்திற்கும் பொதுமக்களுக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவப்பட்டது.
இதனால் ஏராளமான மக்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி, அரூா் சட்டமன்ற உறுப்பினா் சம்பத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையும் படிங்க:திமுக தேர்தல் வாக்குறுதி தெரியாமல் பேசுகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என குற்றச்சாட்டு!