தருமபுரி: ஏலகுண்டூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த பெண் யானையை 15 மணி நேர போராட்டத்துக்கு பின், மயக்க ஊசி செலுத்தி வனத்துறை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
20:27 November 19
கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஏலகுண்டூர் கிராமத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை, இன்று (நவம்பர் 19) அதிகாலை கரும்புத் தோட்டத்தில் உணவு எடுத்துக்கொண்டு காட்டு பகுதியைச் நோக்கி சென்றது.
அப்போது, கிராமத்தில் இருந்த நாய்கள் துரத்தியதால் வழிதவறிய யானை, அருகிலிருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. இதையறிந்த கிராம மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடம் விரைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறை, தீயணைப்புத் துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்புப் பணியின் போது, துப்பாக்கி மூலம் இரண்டு முறை யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கிணற்றில் விழுந்த யானையை வனத்துறை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.