தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பென்னாகரம் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு! - Elephant death in Pennagaram forest

தர்மபுரி: பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக யானை உயிரிழந்தது.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

By

Published : Mar 24, 2021, 10:14 PM IST

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக 15 வயது பெண் யானை உயிரிழந்தது.

கர்நாடகம், கிருஷ்ணகிரி வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவிவருவதால், தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ளன.

ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவும் நிலையில் இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்கள், தண்ணீர்த் தேடி அவ்வப்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட அலுவலகம் அருகே தடுப்பணையில் தண்ணீர் குடிக்க வருகிறது.

இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, ஒகேனக்கல் வனத் துறையினர் கூட்டுக்குடிநீர்த் திட்ட சுத்திகரிப்புத் தண்ணீர் வெளியேற்றும் கால்வாய்ப் பகுதியில் யானை இறந்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து, தகவலறிந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சேகர், கால்நடை மருத்துவர் பிரகாஷ், வனவர்கள் கொண்ட குழுவினர் நிகழ்விடத்திற்குச் சென்று வனப்பகுதியில் இறந்த பெண் யானையை பரிசோதனை செய்ததில் யானை உடல்நலக்குறைவால் இறந்தது தெரியவந்தது. பின்னர் இறந்த யானையை வனப்பகுதியில் புதைத்தனா்.

ABOUT THE AUTHOR

...view details