தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து இ.மென் என்ற மின்சார இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இது குறித்து இ.மென் நிறுவனத்தினர் கூறுகையில்,"இந்த இருசக்கர வாகனத்தை இரண்டரை மணிநேரம் சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். சார்ஜ் தீர்ந்தால் கூட ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.54 ஆயிரம் முதல் ரூ.74 ஆயிரம் வரை இரண்டு மாடல்களில் இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.