தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமீறல்: ஸ்டாலின் ஏழு வாக்குறுதிகள் அடங்கிய காலண்டர்கள் பறிமுதல்! - Flying force

திமுக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஸ்டாலின் ஏழு வாக்குறுதிகள் அடங்கிய காலண்டர்கள், புத்தங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனையில் பற்கும் படை
தீவிர சோதனையில் பற்கும் படை

By

Published : Mar 23, 2021, 10:34 PM IST

தருமபுரி மாவட்டம் உழவர் சந்தை அருகே திமுக மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அட்டை பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன.

இது தொடர்பாக, தகவல் அறிந்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர், அட்டை பெட்டிகளைச் சோதனையிட்டனர். அதில், திமுக தேர்தல் அறிக்கை புத்தங்கள், ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள் அடங்கிய காலண்டர்கள் இருப்பது தெரியவந்தது.

தீவிர சோதனையில் பற்கும் படை

அவை, தேர்தல் விதிமுறைப்படியே, கொண்டு வரப்பட்டதாகவும், அதற்காக ஆவணங்ககையும் திமுகவினர் சமர்ப்பித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பறக்கும் படையினர், காலண்டர்களை பறிமுதல் செய்து, தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details