தருமபுரி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 23ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றுக்கு 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் அட்சியர் மலர்விழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டம் - election counting
தருமபுரி: மே 23ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை,19ஆம் தேதி நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்
இதில் மறுவாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள், உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.