தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த லிங்காபுரம் பகுதியில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சார்பில் இஐஏ-2020 வரைவு அறிக்கை, எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்றுவது ஆகியவற்றை எதிர்த்து அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
'இஐஏ வரைவு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்' - எட்டு வழி சாலை திட்டம்
தர்மபுரி: அரூர் அருகே இஐஏ-2020 வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என எட்டு வழிச் சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூறியுள்ளனர்.
Eight-way anti-road farmers demand withdrawal of EIA bill!
இந்தக் கூட்டத்தில் பேசிய எட்டு வழிச் சாலை எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தைச் சேர்ந்த வேலு, ”எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றும் வகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இஐஏ-2020 வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், இலவச மின்சாரத்தைத் துண்டிக்கும் மின் திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.