நேற்று முன்தினம் (டிச.17), அரியலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எட்டு வழி சாலைக்கு 92% விவசாயிகளின் ஆதரவு இருப்பதாகவும், 8% சதவீத விவசாயிகள் எதிர்ப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மாளகாப்பாடி கிராமத்தில் நேற்று (டிச.18) விவசாயி மாணிக்கம் என்பவருடைய தோட்டத்தில், பாதிக்கப்படும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இந்நிலையில், இன்று (டிச.19) தமிழ்நாடு முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரூர் அருகேயுள்ள சுமைதாங்கி மேடு பகுதியிலுள்ள விவசாயி ஜம்பு என்பவரின் தோட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அரசிடம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் விவரம் இருப்பதை வெள்ளை அறிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட வேண்டும். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் நபர் ஒருவர், உயர் நீதிமன்ற தீர்பை அவமதித்ததாக தெரிவித்து அங்கிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டவர்களை கைது செய் முற்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கைது செய்தால் அனைவரையும் கைது செய்யவேண்டும் எனவும், காவல் நிலையத்திற்கு வாகனத்தில் பயணம் செய்யாமல் நடைபயணமாகத்தான் வருவோம் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி தமிழ்மணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:கேஸ் விலை உயர்வு: விறகு அடுப்பு வைத்து ஆர்பாட்டம்