தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்டை ஏற்றிச் சென்ற லாரி விபத்து - இருவருக்கு காயம் - தர்மபுரியில் முட்டை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

தருமபுரி: மொரப்பூர் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தர்மபுரியில் முட்டை ஏற்றிச்சென்ற லாரி விபத்து
தர்மபுரியில் முட்டை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

By

Published : Jun 8, 2020, 11:35 PM IST

சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டிணத்திலிருந்து தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முட்டை விற்பனை செய்ய மினி சரக்கு வாகனத்தை ராஜி என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மொரப்பூர் அருகே மினி சரக்கு வாகனம் வரும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தருமபுரியில் முட்டை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

இந்த விபத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருவரும் லேசான காயங்களுடன் காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details