தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு எதிரொலி: டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்! - டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மது பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

By

Published : May 8, 2021, 8:13 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகின்றன. கடந்த 6ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன. இந்நிலையில் மே 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில், நீண்ட வரிசையில் மதுப்பிரியா்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல், மூட்டை மூட்டையாக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதேபோன்று காஞ்சிபுரம் மேட்டு தெரு, மார்க்கெட் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சமூக இடைவெளியின்றி முந்தி அடித்துக் கொண்டு மது பாட்டில்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் ரூ.10.72 லட்சம் திருடிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details