தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி வீட்டில் இன்று(ஜன.20) லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அத்துடன் அவருடைய சகோதரர் வீடு, வணிக கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.