தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் தருமபுரியில் வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி - வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் 28 ஆயிரம்கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் தருமபுரியில் வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் தருமபுரியில் வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி

By

Published : Oct 20, 2022, 1:19 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் நீர்வரத்து பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும், தொடர் கனமழைப் பொழிவின் காரணமாக காட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்து பஞ்சப்பள்ளி அணைக்கு 28 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதி பொதுபணிதுறையினர் அணைக்கு வரும் 28 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் மூன்று மதகுகளின் வழியாக வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக பஞ்சப்பள்ளி , தேன்கனிகோட்டை - மாரண்டஅள்ளி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரகூர், அத்தி முட்லு, மாரண்டஅள்ளி மற்றும் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் தருமபுரியில் வெள்ளபெருக்கு பொதுமக்கள் அவதி

பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

இதையும் படிங்க:அந்தியூர் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்

ABOUT THE AUTHOR

...view details