தர்மபுரி: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலப் பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து நான்கு தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று(அக்.12) கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும்; கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதி காடுகளில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், காவிரி நீர் மண் கலந்த நிறத்தில் வருகிறது.