தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி! - ஒகேனக்கல் செய்திகள்

தருமபுரி: கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு குறைந்ததையடுத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்க மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Due to the low level of water released from the Karnataka dams, boat services allowed in the hogenakkal

By

Published : Oct 2, 2019, 5:37 PM IST

கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட சுமார் 30 ஆயிரம் கனஅடி நீரின் காரணமாக ஒகேனக்கலில் சில வாரங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை விதித்தது.

இந்நிலையில், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீர்வரத்து குறைந்துள்ளதால் 35 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் அனைத்தும் மணல் திட்டு வழியாக இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து அருவிகளில் குளிக்கத் தடை நீடித்துவருகிறது.

ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

இரு மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கின் காரணமாக மெயின் அருவிக்கு செல்லக்கூடிய பகுதிகள் சேதம் அடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் உடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தற்போதுவரை தொடங்கப்படவில்லை. சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details