தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருடைய மகன் ஆனந்த். லாரி ஓட்டுநரான இவருக்கும் சேலம் அருகே உள்ள வலசையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகள் கல்பனாவிற்கும் திருமணம் முடிந்து ஒன்பது வருடம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் வரதட்சணைக் கொடுமையால் அடிக்கடி பிரச்சனை காரணமாக பெண்ணின் பெற்றோர் இரண்டு வீடுகளை விற்று ஆனந்திற்கு வரதட்சணை கொடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருக்கு இருசக்கர வாகனம் ஒன்று புதியதாக வாங்கி கொடுத்துள்ளனர். ஆனந்த் சின்னாகுப்பம் பகுதியிலேயே வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும், அதை அறிந்த அவருடைய மனைவி கல்பனா அடிக்கடி தட்டி கேட்டுள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதுகுறித்து ஊரார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று(மே.15) மாலை 5 மணி அளவில் கணவன் வீட்டில் வைத்து கல்பனா விஷம் குடித்ததாக தெரிவித்து, ஊரிலுள்ள பெரியவர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே கல்பனா உயிரிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவர் கூட மருத்துவமனைக்கு செல்லாமல் கல்பனாவின் உறவினர்கள் அவர்களுக்கு தொடர்பு கொண்டால் இணைப்பையும், துண்டித்ததாக கூறப்படுகிறது். எனவே இந்த இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்பனா தாமாக விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை, ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழப்பு மேலும், உயிரிழந்த கல்பனாவின் உடல் அரூா் அரசுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த உயிரிழந்த பெண்ணின் கணவன் ஆனந்தை கல்பனாவில் உறவினர்கள் அடித்து துவைத்தனர். பின்னர் காவல்துறையினர் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.