திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருக்குவளையில் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட 9 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது: மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 215 பேர் மீது வழக்கு! - Actor Udhayanidhi Stalin arrested
தர்மபுரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மறியல் செய்த சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்ட 215 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி
சாலை மறியலில் ஈடுபட்ட பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்ட 215 திமுகவினர் மீது தர்மபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அமலிலுள்ள 144 தடை உத்தரவை மீறுதல், கரோனா பரவும் அசாதாரண சூழலில் நோய் பரப்பும் விதத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.