தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘உங்களுக்கு ஆரத்தி கூட எடுக்க விடல’ - கனிமொழி முன் கண்கலங்கிய அருந்ததியர் சமுதாய பெண்!

பென்னாகரம் அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்ததால் உங்களுக்கு ஆரத்தி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என கண்ணீர் மல்கக் கூறிய பெண்ணை, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கட்டி தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

kanimozhi emotional speech in dharmapuri pennagaram
kanimozhi emotional speech in dharmapuri pennagaram

By

Published : Feb 17, 2021, 7:42 PM IST

தர்மபுரி: ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சிக்காக, மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுவரும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, பென்னாகரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார்.

அப்போது, ஏரியூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அபிதா, “எங்கள் பகுதியில் பட்டியலினத்தவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். தற்போது கூட உங்களை வரவேற்கும் போது ஆரத்தி எடுக்கும் பணிகளுக்கு, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களைத் தான் அனுமதிக்கிறார்கள். அதில் கூட எங்களை ஒதுக்கி வைக்கின்றனர்” என கண்ணீர் மல்க கூறினார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி

இதனை பார்த்த கனிமொழி ஓடி வந்து அந்த பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய கனிமொழி, “சமூகத்தில் ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற நிலையிருப்பது, நமது பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வருகிற திமுக ஆட்சியில் இந்த பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காகப் பாடுபடுவோம்” என்றார். இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

ABOUT THE AUTHOR

...view details