பிரபல ஆங்கில நாளிதழுக்கு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அது இன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தமிழருவி மணியனின் பேட்டியை தனது பாணியில் கிண்டல் செய்து, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘அப்போ டீ கடை ஓனர் நீங்க இல்லையா?’ - ராமதாஸை கலாய்த்த திமுக எம்.பி. - ராமதாஸை கலாய்த்த திமுக எம். பி.
தருமபுரி: நடிகர் ரஜினிகாந்த் அமைக்கும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் என தமிழருவி மணியன் தெரிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்வியை முன்வைத்து டீ கடை ஓனர் நீங்க இல்லையா? என ராமதாஸை திமுக எம்.பி. செந்தில்குமார் கிண்டல் செய்துள்ளார்.
Senthilkumar
அதில், “கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸா? அல்லது ரஜினிகாந்தா?” என்ற கேள்வியை முன்வைத்து, “டீ கடை ஓனர் நீங்க இல்லையா?” என பருத்திவீரன் படத்தில் வரும் வசனத்தை வைத்து கலாய்த்துள்ளார்.