அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், 'அண்ணா பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தைப் பாதுகாத்து, மத்திய அரசிடம் செல்லாமல் அதன் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எடுத்துச் செல்லும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்க வேண்டும். பல்கலைக்கழகம் மத்திய அரசிடம் சென்றுவிட்டால் இடஒதுக்கீடு கிடைக்காது. வெளிநாட்டுப் பேராசிரியர்கள், வெளிநாட்டு மாணவர்களை இங்கு கொண்டு வந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தனித்துவம் பறிபோகும். மத்திய அரசிடம் சென்றால் கட்டணம் அதிகரிக்கும். பின்னர், அதனை யாரும் கேள்விகூட கேட்க முடியாது' எனத் தெரிவித்தார்.