தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், ‘கோபிநாதம்பட்டி கூட்ரோடு சுற்றுப்புற 5 கிலோ மீட்டர் பரப்பளவில் கிராமப்புறங்கள் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் இந்தியன் வங்கி கிளை மட்டும் உள்ளது. வங்கியை பயன்படுத்தும் பொது மக்கள் அதிகமாக இருப்பதால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை தொடங்க வேண்டும்.