’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டத்தில் உள்ள அரூர், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள முக்கல் நாயக்கம்பட்டி என்ற பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் உடன் அவர் கலந்துரையாடினார்.
தைரியம் இருக்கிறதா? அதிமுக எம்எல்ஏவுக்கு சவால் விட்ட திமுக எம்பி! - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமிக்கு தைரியமிருந்தால் வரும் தேர்தலிலும் போட்டியிடட்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ” வரும் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என பால் உற்பத்தியாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். அதிமுக அரசு தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. அவர்களுக்கு அடுத்து வரும் ஆட்சியில் சம்பள உயர்வு அளிக்கப்படும். பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமிக்கு தைரியம் இருந்தால் வரும் தேர்தலிலும் போட்டியிடட்டும். அப்படி போட்டியிட்டால் அவர் தோல்வி அடைவது உறுதி “ என்றார்.
இதையும் படிங்க:'டார்ச்லைட்' எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கா, மக்கள் நீதி மய்யத்திற்கா?