தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்தல் வரட்டும் அமாவாசைகளை விரட்டிவிடலாம்': திமுக எம்பி - திமுக கிராம சபை கூட்டம்

தர்மபுரி: வரும் தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள அமாவாசைகளை விரட்டிவிடலாம் என திமுக எம்பி., செந்தில்குமார் கிராம சபை கூட்டத்தில் பேசியுள்ளார்.

திமுக கிராம சபை கூட்டம்
திமுக கிராம சபை கூட்டம்

By

Published : Dec 23, 2020, 7:43 PM IST

தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ள நிலையில், 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் இன்று (டிச. 23) பல்வேறு மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்ட அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அத்தொகுதியின் திமுக எம்பி செந்தில்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கிராம மக்களுடன் சமமாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

திமுக கிராம சபை கூட்டம்

வேடகட்டமடுவு மக்களின் கோரிக்கைகள்

  • குடிநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
  • வேடகட்டமடுவு கிராமத்திற்கென தனியாக நியாயவிலைக் கடை அமைத்து தர வேண்டும்.
  • நியாய விலைக்கடையில் தரமான அரிசி வழங்க வேண்டும்

தர்மபுரியில் தொழிற்பேட்டை

கிராம சபை கூட்டத்தில் பேசிய எம்பி., செந்தில்குமார், "தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், படித்த இளைஞர்கள் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி செய்துவரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.

இதற்கு மாறாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிற்பேட்டை தொடங்கி படித்த இளைஞர்களுக்கு தர்மபுரியிலேயே வேலை வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஆறு பௌர்ணமி வரை பொறுத்துக் கொள்ளுங்கள், அதற்குள் தமிழ்நாட்டிலுள்ள அமாவாசைகளை விரட்டி அடித்துவிடலாம்” என்றார்.

இதையும் படிங்க:மோடி டிவியில் பேசினால் மக்களுக்கு பயம் வருகிறது - கமல்

ABOUT THE AUTHOR

...view details