மக்களவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு நிதியில் ஊரக மற்றும் கிராமப் புறங்களுக்கு செயல்படுத்தும் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகளில் 10 விழுக்காடுகூட மக்கள் பயன்படுத்துவதில்லை. அரசு கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் வழங்குகிறது. இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகள் தற்போது பயன்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் உள்ளன. கழிப்பறைகள் கட்டப்பட்டு ஓர் ஆண்டுகளில் பெய்த சாதாரண மழையைகூட தாக்கு பிடிக்காத அளவில்தான் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளன எனக் கூறினார்.