தருமபுரி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், 18ஆவது வார்டில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட அருள்மொழி என்பவர், 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாகக் கூறி தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், தருமபுரி எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணி நேற்று நள்ளிரவு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் அவரை வாக்கு எண்ணிக்கை மையம் அலுவலர் ஜெயபாலிடம் அழைத்துச் சென்றனர்.