தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி அருகே திமுக கவுன்சிலர் மகள் சடலமாக மீட்பு… கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை! - இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

தருமபுரி அருகே வனப்பகுதியில் மர்மமான முறையில் கிடந்த இளம் பெண் சடலத்தை மீட்டு கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 7, 2023, 10:32 PM IST

தருமபுரி: கடத்தூரான் கொட்டாய் அடுத்த கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான்கோட்டை காவல் துறையினர் இளம் பெண் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர்.

இதில் இளம் பெண் கழுத்தில், தழும்பு இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் குறித்து அதியமான்கோட்டை காவல்துறை விசாரணை நடத்தியதில், தருமபுரி கோல்டன் தெருவை சேர்ந்த, நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா என்பது தெரியவந்தது.

ஹர்ஷா ஓசூரில் உள்ள மருந்து நிறுவனத்தில் ஆறு மாதங்களாக விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். ஹர்ஷா விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று ஓசூர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:பிளீச்சிங் பவுடர் ஊழல்: தருமபுரி மாஜி கலெக்டர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து நேரடியாக பணிக்கு சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஹர்ஷா கோம்பை வனப்பகுதியில், இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் சடலத்தை மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஹர்சாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருப்பதால், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு: பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ வீட்டில் ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details