தருமபுரி: மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் எழுவரை விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேடையில் கட்சியின் மாநிலப் பேச்சாளர் ஹிம்லர் பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு மணல், ஜல்லி போன்றவை கொண்டுசென்று தமிழ்நாடு வளங்களை அழிக்கின்றனர்" எனப் பேசினார்.
அப்போது அங்கிருந்த திமுக மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் ஈ.டி.டி. செங்கண்ணன் உள்ளிட்டோர் மேடையில் ஏறி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஹிம்லரிடம் மரியாதையாகப் பேசுங்க என மிரட்டினர்.
நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் திமுகவினர் தகராறு மேலும் மைக்கைப் பிடுங்கி, நாற்காலிகளைத் தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இது குறித்து மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:’எங்களுக்குப் பேச எதையும் மிச்சம் வைக்காமல் திமுக அறிவிப்பு வெளியிடுகிறது’ - சீமான் கலகல பேச்சு!