தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் பெ.சுப்பிரமணி, சார் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தடங்கம் சுப்பிரமணி பேசுகையில், “25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ஐந்து ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் கன்னிப் பேச்சில், தர்மபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தேன், இதுவரை செயல்படுத்தவில்லை.