வாக்களித்த தருமபுரி திமுக வேட்பாளர் - bjp
தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
![வாக்களித்த தருமபுரி திமுக வேட்பாளர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3034963-thumbnail-3x2-dmkcandidate.jpg)
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவர் தருமபுரி நகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட வழக்குப் பதிவு மையமான அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த செந்தில்குமார், தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பொதுமக்கள் எழுச்சியோடு இருப்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு உறுதி, என்றார்.